தனி படம் ஆகிறதா நடிகர் சூர்யாவின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர்?
Rolex Character Becoming A Movie Fact Here Idamporul
நடிகர் சூர்யா அவர்களின் ‘ரோலக்ஸ்’ கேரக்டர் தனி படம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில், நடிகர் சூர்யா செய்த ரோலக்ஸ் என்ற ரோல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவிடம், லோகேஷ், ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரை வைத்து முழுமையாக ஒரு படம் பண்ணலாம் என கூறி இருக்கிறாராம். சூர்யாவும் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறாராம்.
கிட்ட தட்ட ஒரு 5 நிமிடங்களே ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா வந்து இருந்தாலும் அதகளம் புரிந்து இருப்பார். இன்றளவும் அந்த கேமியோ கேரக்டர் வெகுவாக பாராட்டப் பட்டு வருகிறது. லோகேஷ் மார்வல் சினிமாக்கள் செய்யும் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை வெகுவாக பாலோ செய்து வருகிறார்.
“ அடுத்ததாக மார்வல் சினிமாக்கள் செய்யும் அதே கேரக்டர் பிலிம்களையும் எடுக்க துவங்குகிறார் போல, வெகுவிரைவில் ரோலக்ஸ் கேரக்டரை முழு படமாக பார்க்கலாம் போல “