சூர்யாவுடன் கண்டிப்பாக ‘இரும்புக்கை மாயாவி’ பண்ணுவேன் – லோகேஷ்
Irumbu Kai Maayaavi With Surya Confirmed
சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படம் உருவாக இருப்பது உறுதி ஆகி இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த படம் எப்போது எப்போது என்று ரசிகர்கள் கேள்விகளை முன் வைத்து கொண்டே இருக்கின்றனர். இந்த நிலையில் சமீப பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யாவுடன் நிச்சயம் ‘இரும்புக்கை மாயாவி’ திரைப்படத்தை பண்ணுவேன் என்று லோகேஷ் திட்டவட்டமாக தெரிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
“ இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன், சிவா, சுதா கொங்கரா, லோகேஷ் என்று அடுத்தடுத்த வெற்றிகளுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார் நடிகர் சூர்யா அவர்கள் “