நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விலங்கு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!
Actor Vimal In And As Vilangu Movie Trailer Is Out
நடிகர் விமல் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விலங்கு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அவர்களின் இயக்கத்தில், விமல், இனியா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விலங்கு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. படம் ஜீ 5 வலை தளத்தில் பிப்ரவரி 18 அன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ களவாணி, வாகை சூடவா என்று தன் நடிப்பிற்கு ஏற்ற கதைக்களத்தில் கலக்கிய விமல், நீண்ட வருடங்களாக கதைக்களத்தை தெரிவு செய்வதில் சொதப்பி வந்தார். இந்த ட்ரெயிலரை பார்க்கும் போது மீண்டும் ட்ராக்கிற்கு வருவதாக தெரிகிறது. பொறுத்து இருந்து பார்க்கலாம் “