படத்தின் பட்ஜெட்டில் 40 சதவிகித்தை சம்பளமாக கேட்கும் நடிகர் விஜய்!
படத்தின் பட்ஜெட்டில் நாற்பது சதவிகிதத்தை நடிகர் விஜய் சம்பளமாக கேட்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட் ஸ்டார் நடிகர்களின் சம்பள உயர்வு தமிழ் சினிமாவின் தரத்தை வெகுவாகவே பாதித்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது அடுத்த படத்திற்கு கிட்ட தட்ட 150 கோடி சம்பளமாக கேட்டு இருப்பதாக தெரிகிறது. இது படத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட்டில் 40 சதவிகிதம் எனவும் அறியப்படுகிறது.
“ கன்னட ஸ்டார் நடிகர்கள் எல்லாம் படம் நன்றாக போனால் அதில் ஒரு பங்கையே சம்பளமாக பிரித்து எடுக்கின்றனர். உலகம் முழுக்க ஹிட் அடுத்த கே.ஜி.எப் 2 திரைப்படத்திற்கே நடிகர் யாஷ் படம் வெளியான பிறகு அதில் கிடைத்த ஒரு பங்கை தான் சம்பளமாக பெற்றாராம் “