நாளை ரிலீஸ்க்கு ஆயத்தம் ஆகும் நிலையில் இன்றே துவங்கி விட்டது ‘பீஸ்ட்’ திருவிழா!
Actor Vijay Beast Celebrations Starts Over The TamilNadu
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ நாளை வெளியாக இருக்கும் நிலையில் இன்றே கொண்டாட்டத்தை துவங்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் ,பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இன்றே தியேட்டர்களில் மாஸ்சாக கொண்டாட்டங்களை துவங்கி இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
“ இணையத்தில் எந்த சமூக வலைதளங்களை எடுத்து பார்த்தாலும் ‘பீஸ்ட்’ கொண்டாட்டமே ஆர்ப்பரிக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது இந்த நெல்சன்-விஜய் காம்போ, வெற்றி பெறும் நம்பிக்கை கொள்வோம் “