ஒரு பக்கம் எதிர்மறை விமர்சனங்கள் வந்த போதும் கூட, 200 கோடி கலெக்சனை எட்டி இருக்கிறது ‘பீஸ்ட்’!
Actor Vijay In And As Beast Joined In 200 Crores Club
பெரும்பாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களை சந்தித்து வந்தாலும் கூட, பீஸ்ட் கலெக்சன் 200 கோடியை எட்டி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி ஏப்ரல் 13 அன்று ‘பீஸ்ட்’ வெளியாகி இருந்தது. பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்கள் படத்தின் மீது வீசப்பட்ட போதும் கூட, அந்த விமர்சனங்களை எல்லாம் கலெக்சன்களாக ஆக்கி அவர்களுக்கெல்லாம் வாய்பூட்டு போட்டு இருக்கிறது பீஸ்ட் கலெக்சன் ரிப்போர்ட்.
“ படத்திற்கு என்ன விமர்சனம் வந்தால் என்ன, ரசிகர்களாகிய நாங்கள் படத்தினை தூக்கி நிறுத்துவோம் என்று ரசிகர்கள் இணைந்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர் “