ரீ ரிலிஸ்க்கு ரெடியானது நடிகர் விஜய் அவர்களின் கில்லி திரைப்படம்!
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில் 2004 கட்டத்தில் வெளியான கில்லி திரைப்படம் தற்போது ரீ ரிலிஸ்க்கு ரெடியாகி இருக்கிறது.
பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் ரிலீஸ் ஆகாததால் தமிழகத்தை பொறுத்தமட்டில் தியேட்டர்கள் தற்போது ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறுச்சோடி கிடக்கிறது. பெரும்பாலான தியேட்டர்கள் இந்த இடைவெளியை நிரப்புவதற்காக பழைய படங்களை மீண்டும் தங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். திருமலை, வாலி உள்ளிட்ட திரைப்படங்களை ஒரு சில தியேட்டர்கள் ரீ ரிலீஸ் செய்து வசூலும் ஓரளவுக்கு அடைந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் தரணி அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2004 கட்டத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் கில்லியை, படக்குழு வருகின்ற ஏப்ரல் 17 அன்று அதிகாரப்பூர்வமாக ரீ ரிலிஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ புதுப்படம் ரிலீஸ்க்கு காத்து இருப்பது போல ரசிகர்கள் கில்லி படத்தின் ரிலீஸ்க்கும் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர். பெரிய படங்கள் ஏதும் ரிலீஸ்க்கு ரெடி ஆகாததால் இந்த வருடம் முழுக்க இப்படி இன்னும் பல ரீ ரிலீஸ்களை பார்க்கலாம் என்கின்றனர் சினிமா வல்லுநர்கள் “