வெகுவிரைவில் வெளியாகிறது ‘லியோ’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Actor Vijay Leo Trailer Update Fact Here Idamporul
நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெகுவிரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் படக்குழு ரசிகர்களை திருப்திபடுத்த லியோ ட்ரெயிலரை அக்டோபர் 1 அன்று வெளியிட முடிவெடுத்து இருக்கிறதாம்.
“ இசை வெளியீட்டு விழாவிற்கு பதிலாக, புதிய முன்னெடுப்பாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து பிரபல தொலைக்காட்சி ஒன்றின் ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது “