’பீஸ்ட்’ படத்திற்கு தடை விதிக்கும் இஸ்லாமிய நாடுகள், காரணம் தான் என்ன?
Actor Vijay In Beast Movie Banned In Kuwait
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு இஸ்லாமிய நாடுகள் தடை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் ‘பீஸ்ட்’. படம் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வர இருக்கும் நிலையில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதாக சொல்லி குவைத் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்து இருக்கின்றன.
“ நடிகர் விஜய் என்றாலே படத்திற்கு இலவச புரோமோசன் கொடுக்க யாராவது ஒருவர் வந்து விடுவார்கள், ஆனால் இது சர்வதேச பிரச்சனையாக இருக்கிறது. இதை பீஸ்ட் படக்குழு எப்படி எதிர்கொள்கிறது என்பதை பொறுத்து இருந்து காணலாம் “