கதை ரெடியாக இருக்கிறது, விஜய் சரி என்று சொன்னால் நிச்சயம் இணைவு நிகழும் – வெற்றிமாறன்
Vetri Maaran Soon Directing Vijay Idamporul
நடிகர் விஜய் அவர்களுக்கு கதை ரெடியாக இருக்கிறது நிச்சயம் இணைவு நிகழும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.
’வாடிவாசல்’ திரைப்படத்தில் பிசியாக இயங்கி வரும் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் அவர்களுடன் இணைவது பற்றி ஒரு கருத்தை கூறி இருக்கிறார். கதை ரெடியாக தான் இருக்கிறது, தற்போது இருக்கும் வேலைகள் முடிவடைந்ததும், நடிகர் விஜய் அவர்களிடம் நேரடியாக சென்று கதை சொல்வேன். விரைவில் இணைவு சாத்தியம் ஆகும் என்று கூறி இருக்கிறார்.
“ வெற்றிமாறன், நடிகர் விஜய் என்பது ரசிகர்களின் வெகுநாள் ட்ரீம் காம்போ, என்பதால் இணைவு மட்டும் சாத்தியமானால் அது ரசிகர்களுக்கு பண்டிகை தான் “