இரண்டே நாளில் 250 கோடி வசூலை நெருங்கிய லியோ திரைப்படம்!
லியோ திரைப்படம் இரண்டே நாளில் 250 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் உலகளாவிய அளவில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இரண்டே நாளில் 232 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் இரண்டு நாளில், அதிக வசூல் செய்த இந்திய படங்களில் தற்போது லியோ முன்னிலையில் இருப்பதாக கூடுதல் தகவல்.
“ படத்திற்கு ஒரு சில எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் கூட, வசூல் ரீதியாகவும், பிசினஸ் ரீதியாவும் லியோ பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது “