நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்?
Actor Vijay In Jawan Film Fact Here Idamporul
நடிகர் ஷாருக்கான் அவர்களின் ஜவான் திரைப்படத்தில், நடிகர் விஜய் ஒரு சில சீன்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரும் ஒரு ரோல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நிமிடங்கள் வரும் அந்த ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் நடித்து இருப்பதாக கூடுதல் தகவல்.
தற்போதெல்லாம் ஏதாவது ஒரு ட்விஸ்ட் வைக்க வேண்டும் என்று, படத்தின் கடைசி நிமிட காட்சிகளில் ஒரு மாஸ் ஹீரோவை அழைத்து வந்து, அவரை 5 நிமிடம் நடிக்க வைக்கிறார்கள். அது வொர்க்கவுட்டும் ஆகிறது. படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பாணியில் தற்போது இயக்குநர்கள் இப்படி ஈடுபட்டு வருகின்றனர்.
“ அந்த வகையில் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு என்ன ரோல் என்பதை பொறுத்து இருந்து ரசிக்கலாம் “