கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி, காரணம் என்ன?
Vijay Sethupathi Refuse To Act With Krithi Shetty Fact Here Idamporul
நடிகை கீர்த்தி ஷெட்டியை புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக ஏற்க மறுத்து இருக்கிறாராம் நடிகர் விஜய் சேதுபதி.
உப்பென்னா திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள், நடிகை கீர்த்தி ஷெட்டி அவர்களுக்கு அப்பாவாக நடித்து இருப்பார். இந்தநிலையில் விஜய் சேதுபதி அவர்களின் புதிய படம் ஒன்றில் கீர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு திட்டமிட, மகளாக நடித்த ஒருவரை ஹீரோயினாக பார்க்க முடியாது என விஜய் சேதுபதி அதற்கு மறுத்து இருக்கிறாராம்.
” கீர்த்தி ஷெட்டியும் விஜய் சேதுபதியின் மறுப்புக்கு தயக்கமின்றி ஒகே சொல்லி படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம். ஒரு உறவு படத்தை கடந்தும் நீடிப்பதாக உணர்கிறார் போல நடிகர் விஜய் சேதுபதி, அவரது முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் “