நடிகர் அஜித் அவர்களின் பாணியில் ரசிகர்களுக்கு எச்சரிக்கை அறிக்கை விட்டு இருக்கும் விஜய்!
Actor Vijay Warns His Fans Behaviour
ரசிகர்களுக்கு அவ்வப்போது அறிக்கை விடும் அஜித் போல, நடிகர் விஜய் அவர்களும் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்து இருக்கிறார்.
அரசியல் தலைவர்களை பொதுவெளியில் விமர்சிக்க கூடாது. விமர்சனம் வரும் அளவுக்கு போஸ்டர்கள் ஒட்ட கூடாது. வலைதளங்களில் மீம்ஸ் என்னும் பெயரில் பிறரை இழிவு படுத்துவதை அறவே விட வேண்டும். இதை யாரும் மீறும்பட்சத்தில் இயக்கத்தை விட்டு நீக்கம் செய்யப்பட்டு, சட்ட பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்து இருக்கிறார்.
எச்சரிக்கை அறிவிப்புகளுக்கு எப்போதும் அஜித் தான் பெயர் போனவர் என்றால், தற்போது விஜய்-யும் தன் ரசிகர்களை எச்சரித்து அறிக்கை விட ஆரம்பித்து இருக்கிறார். நிச்சயம் இதற்கெல்லாம் காரணம் என்பது ரசிகர்கள்.
“ கோலிவுட்டை கொண்டாட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் கூட, இந்த ரசிகர்கள் ட்விட்டர் சண்டை என்னும் பெயரில் கேவலமான டாக்குகளை பதிவிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. அவர்களுக்கெல்லாம் இந்த எச்சரிக்கையும் நடவடிக்கையும் நிச்சயம் தேவை தான் “