நடிகர் விக்ரம் – அஜய் ஞானமுத்து இணையும் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!

மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நடிகர் விக்ரம் அவர்களின் ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவடைந்தது.

செவன் ஸ்கீரின் நிறுவனத்தில் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மிர்னாளினி ரவி மற்றும் பலரின் நடிப்பில் நடைபெற்றுக் கொண்டு இருந்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முழுவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“ விக்ரம் – துருவ் விக்ரம் என இருவருக்கும் தற்போது வெளியாகி இருந்த ‘மகான்’ ஒரு மிகப்பெரிய ஹிட் தான். இந்த நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களை இன்னும் குஷிப் படுத்தி இருக்கிறது “

About Author