நீர் விதைத்த விதை எல்லாம் எழுந்து, விதைத்த உன்னை தேடுது ஐயா!
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மண்ணில் விதைகளான கலைவாணர் விவேக் அவர்களின் நினைவு நாள் இன்று.
அவர் விதைத்த விதை எல்லாம் இன்று மரமாய் வளர்ந்து, விதைத்த அவரை தேடுகையில், அவரும் விதைக்கப்பட்டு விட்டார். வாழ்வு இங்கு யாருக்கு நிரந்தரம் இல்லை என்பதை கலைவாணர் விவேக் அவர்கள் அனைவருக்கும் உணர்த்தி சென்று விட்டார். அவர் இல்லை ஆனாலும் அவரின் புகழ் என்றும் இருக்கும்.
“ உயிரையும் உடலையும் தானே இந்த ஜனனம் அழித்து விட்டது, மரத்தின் நிழலாக, குளிராக, புகழாக, பெயராக இருக்கும் அவரை இந்த உலகத்தில் இருந்து இந்த ஜனனம் பிரித்து விட முடியாது “