கே.ஜி.எப் 2 வசூல் உலகளாவிய அளவில் 1,100 கோடியைக் கடந்தது!
KGF Chapter 2 Actor Yash
நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 1,100 கோடிக்கும் மேலான வசூலை எட்டி இருக்கிறது.
ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணைவில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த கே.ஜி.எப் 2, தற்போது உலகளாவிய அளவில் 1,100 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. ஹிந்தி பதிப்பு மட்டும் 400 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது.
“ ஏற்கனவே பாலிவுட்டின் தங்கல் வசூல் சாதனையை முறியடித்து இருக்கும் கே.ஜி.எப் 2 அடுத்ததாக பாகுபலி 2 வசூல் மீது கண் வைத்து இருக்கிறது “