பாலிவுட் வசூல் சாதனைகளை எல்லாம் பறக்கவிட்டது கே.ஜி.எப் 2!

KGF 2 Surpass The Dangal Collection

KGF 2 Surpass The Dangal Collection

இன்னும் உலகமெங்கும் கே.ஜி.எப் 2 அலை ஒயாத நிலையில் வசூல் சாதனையில் பாலிவுட் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி இருக்கிறது.

நடிகர் யாஷ் மற்றும் பிரஷாந்த் நீல் அவர்களின் இணைவில் உருவாகி வெளியாகி இருந்த கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்த நிலையில், படத்தின் வசூல் தற்போது பாலிவுட்டின் தங்கல் திரைப்படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி, தற்போது பாகுபலி 2-க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இன்னமும் தியேட்டர்களில் கே.ஜி.எப் 2 ரசிகர்களின் முழு கொள் அளவுடன் திரையிடப்பட்டு வருவதால் பாகுபலி 2 திரைப்படத்தின் வசூல் சாதனையும் வெகு விரைவில் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

” இந்திய அளவிலான வசூல் சாதனையில் முதல் இரண்டு இடங்களை தென் இந்திய சினிமாக்கள் நிரப்பி இருப்பது தென் இந்திய சினிமாக்களின் தரத்தை குறிக்கிறது “

About Author