சினிமா உலகே எதிர்பார்த்து காத்து இருக்கும் கே.ஜி.எப் 2 ட்ரெயிலர் இன்று வெளியாகிறது!

KGF 2 Trailer Releasing Today

KGF 2 Trailer Releasing Today

நடிகர் யாஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது.

தற்போது ஒட்டு மொத்த சினிமா உலகமும் எதிர்பார்த்து காத்து கிடக்கும் படம் என்றால் அது கே.ஜி.எப் 2 என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று மாலை 6:40-ற்கு கே.ஜி.எப் 2 ட்ரெயிலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து, ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

“ ட்ரெயிலர் என்பது ஒரு படத்தின் ஈர்ப்பு என்றே சொல்லலாம். ஒரு படத்தின் ட்ரெயிலரே ரசிகர்களை தியேட்டருக்கு இழுக்கும். அந்த வகையில் கே.ஜி.எப் 2 ட்ரெயிலர் எப்படி இருக்கும் என்று ஒவ்வொரு ரசிகனின் எண்ணத்திற்குள்ளும் ஏற்கனவே புகுந்து விட்டது கே.ஜி.எப் அலை “

About Author