திரையிலும் சரி நிஜத்திலும் சரி மனிதத்தோடு வாழ்ந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
HBD Vijayakanth
கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர். திரையில் நடித்தாலும் கூட நிஜத்தில் நடிக்காமல் வாழ்ந்தவர். மனதில் பட்டதை பேசும் தைரியக்காரர். சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். மீண்டும் தன் கம்பீர குரலோடு அவர் மீண்டு(ம்) வர வேண்டும் என்ற வார்த்தைகளுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
“ உடல்நிலை வயது மூப்பு இரண்டும் அவரை வாட்டி வதைக்கிறது. என்றாவது ஒரு நாள் மீண்டு வந்து, மீண்டும் தனது கம்பீர குரலில் ஒரு மேடை அமைத்து பேசி விட மாட்டாரா என்பதே ரசிகர்களின் ஏக்கம் “