திறமைகள் விஞ்சி நிற்கும் போது, தோலின் கலர் ஒருவரின் சாதனைக்கு தடையாக நிற்பதில்லை!
பெரும்பாலும் சினிமா என்றாலே அழகு, நிறம் இதெல்லாம் மிகவும் முக்கியம் என்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த வழக்கங்களை எல்லாம் உடைத்து எறிந்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தவர் தான் நடிகர் முரளி.
முரளி அவர்கள் சினிமாவை துவங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் பலரும் ’இவருக்கு ஏன் சினிமா ஆசை’ என கேலி கிண்டல் செய்தவர்கள் தான் அதிகமாம், ஆனால் நடிகர் முரளி அவர்களோ அந்த கேலி, கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது திறமையின் மேல் நம்பிக்கை வைத்து இருந்தார். தொடர்ந்து தனக்கு வந்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தனது முழு உழைப்பையும், முழு திறமையையும் அந்த படத்திற்காக வெளிக்கொணர்ந்தார்.
காதல் படம், ஆக்சன் படம், எமோசனல் படம், குடும்ப படம் என இவர் நடிக்காத படங்களின் வகைகளே இல்லை. படத்திற்கு ஏற்ப தனது நடிப்பிலும் வித்தியாசம் காட்டி இருப்பார். கிட்ட தட்ட 75 -கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து இருக்கும் முரளி, பிறந்தது கர்நாடகா என்றாலும் கூட தமிழ் ரசிகர்களாலே அவர் பெரிதும் போற்றிக் கொண்டாடப்பட்டார்.
“ திறமைகளுக்கு நிறம் அவசியமில்லை என்பதை நிரூபித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்த முரளி அவர்களை காலம் இன்னும் கொஞ்ச நாள் சினிமாவிற்காக விட்டு வைத்து இருக்கலாம் “