‘இனி படங்களை தயாரிக்கும் ஐடியா இல்லை’ – அமலா பால்
Amala Paul Recent Interview
இனி படங்களை தயாரித்து வெளியிடும் ஐடியா சுத்தமாக இல்லை என அமலா பால் பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
சமீபத்தில் ‘கடாவர்’ என்னும் படத்தில் நடித்து, அதை தயாரித்து பிரபல வலை தளத்திலும் வெளியிட்டு இருந்தார் அமலா பால். இந்த பட தயாரிப்பின் போது ஒரு சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும், பண விரயம் செய்வது போல இருந்ததாகவும் கூறி இனி படங்களை தயாரிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம் அமலா பால்.
“ படங்களை தயாரிப்பது என்பது மிகப்பெரிய சிக்கல் தான். சமீப காலமாகவே தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வர காரணம், நடிகை, நடிகர்கள் ஏற்படுத்தும் விரய செலவு என தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது “