31 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு மீண்டும் நடிக்க வரும் அமலா!
Amala Acting In Tamil After 31 Years
நடிகை அமலா அவர்கள் கிட்ட தட்ட 31 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்க வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் அவர்களின் இயக்கத்தில், சர்வானந்த், ரீது வர்மா நடிக்க இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை அமலாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசியாக தமிழில் 31 வருடங்களுக்கு முன் கற்பூரமுல்லை(1991) திரைப்படத்தில் அமலா நடித்து இருந்தார்.
“ இன்னமும் வலையோசை பாட்டில் அமலாவை ரசித்துக் கொண்டு இருக்கும் ரசிகர்கள் பலர், மீண்டும் தமிழுக்கு வந்ததில் சந்தோசமே “