மீண்டும் இயக்குநர் ராம் அவர்களின் இயக்கத்தில் அஞ்சலி!
Actress Anjali
நடிகை அஞ்சலி மீண்டும் இயக்குநர் ராம் அவர்களின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் ’ஆனந்தி’யாக வாழ்ந்த அஞ்சலியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. இயக்குநர் ராம் அவர்களின் அற்புத படைப்பில் அது ஒரு அற்புத கதாபாத்திரம். இந்த நிலையில் மீண்டும் ராம் அவர்களின் இயக்கத்தில் நிவின்பாலியுடன் நடிகர் அஞ்சலி கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ அன்று பார்த்த அதே ஆனந்தியை மீண்டும் பார்க்க முடியுமா என்பதே ரசிகர்களின் ஏக்கமாக இருக்கிறது. அதை அஞ்சலி வெளிக்கொணருவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “