நடிகை மீனா அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய விழைந்து இருக்கிறார்!
Actor Meena Registered To Donate All Of Her Organs
நடிகை மீனா அவர்கள் இறப்பிற்கு பின்னர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதி மொழிப்பத்திரத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறார்.
சமீபத்தில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்(46) நுரையீரல் தொற்று பிரச்சினை காரணமாக தீடிரென்று இறந்தது தமிழ் சினிமா உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. ’எங்கேனும் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டு இருந்தால் தன் கணவர் பிழைத்து இருப்பார்’ என்பதை உணர்ந்த நடிகை மீனா அவர்கள் தற்போது அவர் உடல் உறுப்பை தானம் செய்வதற்கான உறுதி மொழி பத்திரத்தில் கையெழுத்து இட்டு இருக்கிறார்.
“ நம் உடல் உறுப்பை தானம் செய்வதன் மூலம் எங்கோ ஒரு 8 உயிர் பிழைக்கிறது. 8 குடும்பங்கள் உயிர்க்கிறது. என் கணவரை என்னால் மீட்க முடியவில்லை. என்னால் ஒரு சில உயிர்கள் மீண்டால் அது எனக்கு சந்தோஷமே என்று நடிகை மீனா அவர்கள் தெரிவித்து இருக்கிறார் “