பாலிவுட் நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதி!
Actress Nikki Tamboli Tested Corona Positive
பாலிவுட், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து வரும் நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழில் காஞ்சனா 3-யிலும் மற்றும் பாலிவுட், தெலுங்கு படங்களிலும், ஆல்பங்களிலும் நடித்து பிரபலமான நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு ஏற்கனவே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ தொடர்ந்து கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை கையில் எடுத்து இருக்கின்றனர் “