தொடர் உடல் நலக்குறைவால் நடிப்பிற்கு முழுக்கு போட இருக்கிறாரா நடிகை சமந்தா?
தொடர்ந்து ஏற்படும் உடல்நலக்குறைவுகளால் நடிப்பிற்கு சமந்தா முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை சமந்தா தொடர் உடல் நலக்குறைவுகளால் தற்போதெல்லாம் எந்த ஷூட்டிங் களங்களிலும் தென்படுவதாக தெரியவில்லையாம். இது போக ஏற்கனவே கமிட் ஆகி இருந்த பல படங்களின் தயாரிப்பாளர்களிடமும் சமந்தா உடல் நலம் குறித்து எந்த வித பதிலும் அளிக்காததால் மாற்று ஹீரோயின்களை அவர்கள் அமர்த்தி வருகின்றனராம்.
“ ஒரு பக்கம் சமந்தா நடிப்பிற்கு முழுக்கு கொடுத்து விட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் சமந்தா தரப்பில் ஒரு சிலர் அவர் மீண்டு மீண்டும் திரைக்கு வருவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் “