பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கிறாரா நடிகை காயத்ரி?
Gayathrie Shankar Love With Famous Standup Comedian Fact Here Idamporul
நடிகை காயத்ரி ஷங்கர் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை காயத்ரி ஷங்கர், பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் அரவிந்த் அவர்களை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை குறித்து காயத்ரி தரப்பினருடம் கேட்ட போது அவர்களும் தயங்காமல் ஆம் என்று சொல்லி இருக்கின்றனர்.
“ ஒரு சில தகவல்கள் உண்மையாகவே இருந்தாலும் கூட மறுக்கின்ற தரப்புகள் இருக்கும் போது, ஒப்புக் கொண்டு அந்த கிசு கிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காயத்ரி போன்ற நடிகைகளும் இருக்க தான் செய்கிறார்கள் “