பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருப்பவர் திவ்யா கணேஷ். இவர் நடிக்கும் ஜெனி எனும் கதாபாத்திரத்திற்கு நிறைய வரவேற்பு இருக்கிறது, நிறைய ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் பட்சத்தில் இன்று அவர் புதிதாக நடிகை நளினி உடன் சேர்ந்து சில புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஹாப்பி பர்த்டே மம்மி என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி நளினியின் முன்னாள் கணவரான ராமராஜன் மற்றும் நளினிக்கு பிறந்த பெண்ணா நீங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்று பார்த்தீர்களென்றால், நளினி ராமராஜன் ஜோடிக்கு பிறந்தது அருண் அருணா என்னும் இரட்டையர்கள். பழக்கத்தில் திவ்யா கணேஷ் மம்மி என நளினியை அழைப்பதை ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் என்பதே உண்மை. இந்த கேள்விகளை பார்த்து திவ்யா கணேஷ் அதிர்ச்சியாகி இருப்பார் என்பதே நிதர்சனம்.