தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் – ஜெனிலியா
தென் இந்திய படங்களில் நடித்ததால் பாலிவுட்டில் என்னை நிராகரித்தனர் என நடிகை ஜெனிலியா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
சினிமா என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது தென் இந்திய சினிமா தான். அச்சமயங்களில் தென் இந்திய நடிகை என்பதால் என்னை பாலிவுட் நிறையவே நிராகரித்தது. ஒரு கட்டத்திற்கு பின் என்னை அது தேடி வந்தது. அப்போது நான் பாலிவுட்டை நிராகரித்தேன் என நடிகை ஜெனிலியா பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
“ பாலிவுட் என்பதே வன்மவாதிகள் சூழ் உலகம் என்பதை அதில் இருந்து பணியாற்றி வெளியேறிய ஒவ்வொருவரும் தெரிவித்து வருவது, பாலிவுட் உலகை அதிர்ச்சியுற செய்து இருக்கிறது “