பிரபல நடிகைக்கு ஷூட்டிங்கில் திடீர் நெஞ்சு வலி, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
![Deepika Padukone Hospitalised For Minor Chest Pain](https://i0.wp.com/idamporul.com/wp-content/uploads/2022/06/Deepika-Padukone-Hospitalised-For-Minor-Chest-Pain-scaled.jpg?fit=640%2C360&ssl=1)
Deepika Padukone Hospitalised For Minor Chest Pain
பிரபல நடிகை ஒருவருக்கு ஷூட்டில் இருக்கும் போதே திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ்க்கு ஜோடியாக ஒரு பான் இந்தியா படம் ஒன்றில் நடித்து வருகிறார் தீபிகா படுகோனே. ஹைதராபாத்தில் இந்த ஷூட் நடந்து கொண்டு இருக்கையில் திடீரென்று தீபீகா அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
“ தற்போது அவர் நலமுடன் இருந்தாலும் இன்னும் சிறுது நாட்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்தி இருக்கிறாராம் “