நடிகை தீபா சங்கர் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்கள்!
நடிகை தீபா சங்கர் அவர்கள் பற்றி யாரும் அறிந்திடாத சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
நடிப்பிற்கு முன்பு
நடிகை தீபா சங்கர் தூத்துக்குடியை பூர்விகமாக கொண்டவர். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வழக்கமான பெண்களை போல திருமணம் செய்து விட்டு இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். மிகவும் ஒரு கடினமான ஏழ்மையான சூழலில் வாழ்ந்தவர் தான். திருமணத்திற்கு முன்பே நடனத்திலும், நடிப்பிலும் மிகப்பெரிய ஆர்வம் இருந்து இருக்கிறது. ஆனால் ஏழ்மையின் காரணமாக எந்த திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் முடங்கி கிடந்து இருக்கிறார்.
ஆரம்ப காலக்கட்டங்களில் கால் வயிறு உணவுக்கே கஸ்டப்பட்ட குடும்பம் தானாம், கிடைத்த உணவுகளை தீபா மற்றும் தீபாவின் உடன் பிறந்தவர்கள் ஆளுக்கு கொஞ்சம் என பங்கிட்டு சாப்பிடுவார்களாம். அதனாலே ஏனோ பிற்காலத்தில் சாப்பாட்டு பிரியராக தீபா மாறி விட்டாராம்.
திரை வாழ்க்கை
மெட்டி ஒலி என்ற சீரியல் தான் தீபாவின் திரை வாழ்க்கையின் முதற் புள்ளி, பெரிய திரையில் மாயாண்டி குடும்பத்தார் தான் முதல் திரைப்படம். கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு தான் நடிகை தீபாவிற்கு வாய்ப்புகள் குவிந்தன. அதற்கு பின்னர் பல்வேறு டெலிவிஷல் நிகழ்ச்சிகளும் தீபாவிற்கு கை கொடுத்தன. தற்போது கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார் என்பது பெருமைக்குரியது.
நடனத்தில் தீபா
தீபா நடிகை மட்டும் அல்ல, ஒரு மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட, பல்வேறு ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக தனது வீட்டிலேயே நடனமும் கற்றுக் கொடுக்கிறாராம் தீபா. நடனம் மட்டும் அல்ல நடனத்தோடு முகபாவனைகளை காட்டி ஆடுவதிலும் தீபா சங்கர் வல்லவராம். பெரும்பாலும் அவரை காமெடியனாகவே சித்தரிப்பதால் அவரின் இந்த திறமையை அவர் அவ்வளவாக வெளிக்காட்டுவதில்லை போல.
உருவக்கேலிக்கு எதிரானவர்
பொதுவாகவே தீபா சங்கர் உருவக்கேலிக்கும் நிறக்கேலிக்கும் எதிரானவராம். சிறுவயதில் யாராவது தன்னை உருவக்கேலியோ, நிறக்கேலியோ செய்து விட்டால் அழுது விடுவாராம். மீடியாவிற்குள் நுழைந்ததும் அந்த கேலி அவருக்கு பழகி விட்டதாம். தன்னை ஒருவர் கேலி செய்யும் போது, பிறர் சிரிப்பதால் அதை பொறுத்துக் கொண்டு இருப்பாராம். இருந்தாலும் அது அவருக்கு வலிக்கவே செய்யும் என கூறப்படுகிறது.
” இயல்பு என்பதே தீபாவின் ஆகச்சிறந்த பிளஸ், அதுவே அவரை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றதும் கூட, அவர் எங்கு சென்றாலும், எந்த மேடையாக இருந்தாலும், அவர் இயல்பை அவர் விட்டுக் கொடுப்பதே இல்லை, அந்த இயல்பு அவரை இன்னும் பல உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை “