ஒரு தகவலை பகிரும் போது தயவு செய்து அதன் உண்மை தன்மையை ஆராயுங்கள், நிவேதா பெத்துராஜ் உருக்கம்!
தன்னை பற்றிய அவதூறு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் நிவேதா பெத்துராஜ் தானாக முன்வந்து அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.
நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்களுக்கு ஒரு அரசியல் பிரமுகர் பண ரீதியாக நிறைய உதவி செய்து வருவதாக ஒரு வதந்தி இணையத்தில் பரவி வந்தது. பின்னர் அந்த வதந்தியை ஒரு சில இணைய பிரபலங்கள் கையில் எடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க ட்ரென்ட் ஆகும் வகையில் ஊதி ஊதி ஒரு பெரிய சேதியாகவே ஆக்கி விட்டனர்.
நடிகைகள் பற்றிய சிறு துணுக்குகளே சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வைரலாகி விடும் என்ற நிலையில், இது ஒரு அரசியல் பிரமுகர் சார்ந்த வதந்தி என்பதால் அதை இணையத்தார்கள் எந்த வித ஆராய்வும் இல்லாமல் சுற்றும் முற்றும் பரப்ப ஆரம்பித்து விட்டனட். இந்த நிலையில் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் தன்னை பற்றி பரப்பப்பட்டு வரும் ஒரு வதந்திக்கு எதிராக, உருக்கமான ஒரு பதிவை சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது ’ஒரு சில அரசியல் பிரமுகருடன் என்னை இணைத்து உண்மை இல்லாத சில தகவல்களை ஒரு சிலர் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் நானும் என் குடும்பமும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். தயவு செய்து ஒரு செய்தியை பகிரும் போது அதன் உண்மை தன்மையை ஆராய்ந்தும், இது ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட செய்தி என்பதையும் உணர்ந்து பகிருங்கள்’ என நடிகை நிவேதா ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
” நிவேதா பெத்துராஜ் அவர்களின் இந்த பதிவிற்கு பின்னர் பலரும் நிவேதாவிற்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கின்றனர். இந்த வதந்தி பரவுவதற்கு காரணமாக இருந்த ஒரு சில பிரபலங்களை, பொதுவான சமூக வலைதள பயனாளிகள் சமூக வலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர் “