நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு இணையாக கேட்கும் ராகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh Hike Her Salary Idamporul
பாலிவுட் சென்றதில் இருந்து ராகுல் ப்ரீத் சிங் எந்த படத்தில் கமிட் ஆகினாலும் நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு இணையாக கேட்கிறாராம்.
பாலிவுட் சென்றதில் இருந்து நடிகை ராகுல் ப்ரீத் சிங் சம்பள விஷயத்தில் ரொம்ப கிராக்கி செய்து வருகிறாராம். ஒரு படத்தில் நடிகர்களுக்கு இணையாக தானே நாங்களும் நடிக்கிறோம், எங்களுக்கும் அதே சம்பளத்தை கொடுங்கள் என்று கமிட் ஆகும் ஒவ்வொரு படத்திற்கும் விதண்டவாதம் செய்வதால் ஒவ்வொரு படத்தில் இருந்தும் நீக்கப்பட்டு வருகிறாராம் ராகும் ப்ரீத்.
“ விவாதத்திற்கு எல்லாம் சரியாக இருந்தாலும், பெரும்பாலும் படங்களில் நாலைந்து சீன்களுக்கு வரும் நடிகைகள் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பது என்பது ஏற்கத்தக்கதல்ல என்று தயாரிப்பாளர்கள் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர் “