ஒரு ரூபாய் கூட நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சமாய் பெறாமல் தன் காதலையும், தன் வலிமையையும் ஒரே புள்ளியில் நிரூபித்த சமந்தா!

Samantha Naga Chaitanya Divorce And Some Unknown Facts Idamporul

Samantha Naga Chaitanya Divorce And Some Unknown Facts Idamporul

சமந்தா – நாகசைதன்யா ஜோடி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்த போதும் கூட, நாகசைதன்யாவிடம் இருந்து 1 ரூபாய் கூட சமந்தா ஜீவனாம்சமாய் பெற விரும்பவில்லையாம்.

விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் சந்தித்து கொண்ட சமந்தா – நாகசைதன்யா ஜோடி அப்போதே தங்களுக்கான காதல் விதையை இருவருக்கும் இடையில் விதைத்துக் கொண்டனர், பின்னர் சிறிது காலம் மறைமுகமாக காதலித்து வந்த ஜோடி அதற்கு பின்னர் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக் கொண்டு பொது வெளியிலும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தென்பட்டு வந்தனர்.

பின்னர் 2017, இருவரும் நிச்சயம் செய்து கொண்டு திருமணத்திற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டு இருக்கும் போது நாகசைதன்யாவின் குடும்பத்தில் இருந்து சற்றே பிரச்சினை எழும்ப ஆரம்பிக்கிறது. பின்னர் நாகசைதன்யா திருமணத்தில் தீர்க்க முடிவாக இருக்கவே பின்னர் அந்த பிரச்சினையை நாக சைதன்யாவின் குடும்பத்தினர் அப்படியே ஓரங்கட்டி விடுகின்றனர்.

நிச்சயம் செய்து கொண்ட குறிப்பிட்ட நாட்களிலேயே திருமணமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட படங்களையும் பதிவுகளையும் பார்க்கும் போது, ப்பா என்ன ஒரு ஜோடி, என பிரம்மிக்க தான் வைத்தனர். இருவரும் இருவருக்கும் இடையில் காதலை செம்மையாக பகிர்ந்து கொண்டாலும் கூட நாக சைதன்யாவின் குடும்பத்தினருக்கு சமந்தா மேலும் படத்தில் நடிப்பது பிடிக்காமல் இருந்து இருக்கிறது.

அதை தொடர்ந்து நாக சைதன்யாவின் மூலம் வெளிப்படுத்த இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு தொடர ஆரம்பித்து இருக்கிறது. தொடர்ந்து இந்த அழுத்தத்தை தாங்கி கொள்ள முடியாத சமந்தா, ஒரு கட்டத்தில் பிரிவை வேண்டி நிற்கும் நிலை ஏற்படுகிறது. பின்னர் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதற்கு முடிவெடுக்கின்றனர். இருவருக்கும் இடையில் அதீத காதல் இருந்தாலும் கூட நாக சைதன்யாவின் குடும்பம் கொடுத்த அழுத்தமே சமந்தா – நாகசைதன்யா குடும்பம் பிரிவதற்கு பெரிய காரணமாக கூறப்படுகிறது.

பொதுவாக விவாகரத்து என்னும் போது எவ்வளவு கோடி சம்பாதிக்கும் மனைவியாக இருந்தாலும், எவ்வளவு எளிதான குடும்பத்தை சார்ந்த மனைவியாக இருந்தாலும் கணவனிடன் ஜீவனாம்சம் என்ற வகையில் சொத்துக்களை, பணங்களை வேண்டி பெறுவது வழக்கம், சட்டத்திலும் அதற்கு இடம் இருக்கிறது, இவ்வாறாக பல பெண்கள் பல ஆண்களை ஜீவனாம்சம் என்ற பெயரில் சித்ரவதை செய்த பல நிகழ்வுகளும் இந்த சினிமாத்துறையில் அரங்கேறி இருக்கிறது.

ஆனால் சமந்தாவோ, நாக சைதன்யாவின் குடும்பம் ஜீவனாம்சமாக கோடிகளில் அள்ளி கொடுக்க முற்பட்ட போதும் கூட, அவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட பெறவில்லையாம். தன்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையும், தான் அவ்வாறு பெற்றுக்கொண்டால் தான் வைத்த காதலுக்கு அது ஒரு அவமரியாதை போல ஆகிவிடும் என்பதையும் கருத்தில் கொண்டு சமந்தா அந்த ஜீவனாம்சத்தை பெற மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பிரிவு அரங்கேறிய பிறகு இருவரில் அதிகமாக பாதித்தது யார் என்றால் அது சமந்தா என்று தான் சொல்ல வேண்டும். இந்த பிரிவிற்கு பின் பல படங்களை அவர் நிராகரித்தார். பல மாதங்கள் தனிமையில் கழித்தார். தொடர்ந்து தனிமை மற்றும் தொடர்ச்சியான மன அழுத்தங்களால் பல்வேறு உடல் ரீதியான மன ரீதியான பிரச்சினைகளுக்கும் உள்ளானார். இதனால் பல நாட்களை மருத்துவமனையிலேயே கழித்தார்.

” தற்போது தான் அனைத்தில் இருந்தும் மீண்டு கொஞ்சம் மன வலிமையோடு, மீண்டும் சினிமா உலகத்தில் கால் தடம் பதித்து இருக்கிறார் சமந்தா. அவர் அனைத்தையும் எளிதாக எடுத்துக் கொண்டு அனைத்தில் இருந்தும் நல்லபடியாக மீண்டு, அவர் விட்ட இடத்தை மீண்டும் அடைய வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “

About Author