இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகை அதீதி ஷங்கர்?
Aditi Shankar In Selva Raghavan Directorial Fact Here Idamporul
இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் நடிகை அதீதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விருமன், மாவீரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அதீதி ஷங்கர், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படம் செவன் ஜி ரெயின்போ காலனியின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.
செல்வராகவன் தற்போதெல்லாம் இயக்கத்தை விட்டு விட்டு முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்கேற்றார் போல அவருக்கு வாய்ப்புகளும் வந்து குவிகிறது. மீண்டும் இயக்குநராக அவரை பார்க்க வேண்டும் என்று எண்ணிய ரசிகர்களுக்கு இந்த அப்டேட் நிச்சயம் மகிழ்வை கொடுக்கும்.
“ அதீதி ஷங்கர் செல்வராகவன் இயக்கத்திலா, அய்யயோ என்றும் ஒரு புறம் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர், இன்னொரு பக்கம் செல்வராகவன் இயக்குநராக மீண்டும் களத்திற்கு வருவதற்கு வரவேற்பும் பெருகி வருகிறது “