பாலிவுட்டில் ஒரு ஆட்டம் காட்டிய இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் தனது ஆதிக்கத்தை நிரூபிக்க களம் இறங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
பாலிவுட்டில் ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ஸ்டார் இயக்குநர் ஆகி இருக்கும் இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் அதிகாரப்பூர்வமாக களம் இறங்கி இருக்கிறார். கடந்த வருடமே சொல்லப்பட்டு வந்த அல்லு அர்ஜூன் – அட்லி கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி ஆகி இருக்கிறது.
சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசை அமைக்க இருப்பதாகவும், படம் 5 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. வெகு விரைவில் படத்திற்கான வேலைகள் துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
“ ஏற்கனவே பாலிவுட்டில் அட்லியின் மவுசு உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது டோலிவுட்டிலும் தன் பெயரை பதிக்க கிளம்பி இருக்கிறார் “