அஜித் – விஜய் ரசிகர்களை இணைய வைத்த தளபதி விஜய் அவர்களின் நெகிழ்ச்சியான புகைப்படம்!
Thalapathy Vijay Fans Meet Idamporul
நடிகர் விஜய் அவர்கள் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம், விஜய் ரசிகர்களை மட்டும் அல்லாது அஜித் ரசிகர்களையும் நெகிழ வைத்து இருக்கிறது.
பனையூரில் நடிகர் விஜய் மற்றும் மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய ரசிகர்கள் மீட்டிங்கில், நடிகர் விஜய் அவர்கள் தனது மாற்றுதிறனாளி ரசிகனை சுமந்து கொண்டு ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. தற்போது அந்த போட்டோவை விஜய் ரசிகர்கள் மட்டும் அல்லாது அஜித் ரசிகர்களும் நெகிழ்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
“ என்ன தான் இணையத்தில் இரு ரசிகர்களும் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டே இருந்தாலும் மனிதம் இருவரிடம் வரவேற்கப்படுகிறது என்பது நல்ல விடயமே “