’மங்காத்தா’ படத்திற்கு பிறகு மீண்டும் மாஸ் வில்லனாக களம் இறங்கும் நடிகர் அஜித்!
Ajith Kumar Again Acting In A Villain Role
நடிகர் அஜித் குமார் அவர்களின் ‘வலிமை’ வெளியாக காத்து இருக்கும் நிலையில் அடுத்த படத்தில் மாஸ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ வெளியாக காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தில் ஒரு மாஸ் வில்லனாக நடிக்க அஜித் அவர்கள் ஒப்பந்தம் ஆகி இருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ கொரோனா சூழலில் வலிமை தள்ளிப்போனதை அடுத்து ரசிகர்கள் மிகவும் சோகத்தில் இருந்தனர். அவர்களுக்கெல்லாம் இந்த அப்டேட் நிச்சயம் ஒரு புத்துணர்வை கொடுக்கும் “