வெளியாகி இருக்கிறது அதிரடியான சரவெடியான ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர்!
Valimai Official Trailer Is Out
நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
போனி கபூர் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் H. வினோத் அவர்களின் இயக்கத்தில், அஜித் குமார், கார்த்திகேயா, ஹியுமா குரேஷி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினரால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
“ தற்போதெல்லாம் வாரத்திற்கு ஒரு அப்டேட் தருகிறோம் என்று சொல்லி இறங்கி அடிக்கிறது வலிமை படக்குழு, ட்ரெயிலரே வந்தாச்சு, இனி நேரடியாக திரையரங்கில் வலிமையைக் கொண்டாட வேண்டும் என்பது தான் ரசிகர்களின் எண்ணமாக இருக்கும் “