விரைவில் வெளியாகிறது அஜித் குமார் – ஹெச். வினோத் இணையும் ’AK 61’ பர்ஸ்ட் லுக்!
AK 61 First Look Releasing Date Announced
நடிகர் அஜித் குமார் மற்றும் ஹெச். வினோத் அவர்கள் இணையும் ‘AK 61′ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
போனி கபூர் – ஹெச். வினோத் – அஜித் குமார் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் ’AK 61’ எனப்படும் பெயரிடப்படாத படத்தின் பர்ஸ்ட் லுக், நடிகர் அஜித் குமார் அவர்களின் பிறந்த தினமாக மே 1 வெளியாகும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது.
“ ஒரு அப்டேட் விட்டு விட்டு வருசக்கணக்காய் காக்க வைப்பது அஜித் அவர்களின் வழக்கம், ஆனால் இந்த படம் அப்படியில்லையாம் விரைவில் முடிக்கப்பட்டு தீபாவளி ரிலீஸ்க்கு ரெடி ஆகி விடும் என்றும் தகவல் கிடைத்து இருக்கிறது “