AK 63 | ‘மீண்டும் இணையும் ’பில்லா’ திரைப்படத்தின் கூட்டணி’
AK 63 Confirmed With Vishnu Vardhan
அஜித் குமார் அவர்களின் 63 ஆவது படத்திற்காக இயக்குநர் விஷ்ணு வர்தன் உடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
துணிவு வெளியாக இருக்கிறது, இன்னொரு பக்கம் விக்னேஷ் சிவன் உடன் AK 62 படப்பிடிப்பில் இருக்கிறது. இந்த நிலையில் AK 63 திரைப்படத்திற்காக நடிகர் அஜித் அவர்களை விஷ்ணுவர்தன் அணுகி இருப்பதாக தெரிகிறது. முன்னதாக சொன்னது போல பீரியடிக் பிலிம் அல்லாமல் ஆரம்பம், பில்லா போல ஒரு அதிரடி படமாக தான் இருக்கும் எனவும் கருத்து நிலவி வருகிறது.
விஷ்ணு வர்தனுடனான பீரியடிக் பிலிம் குறித்து ஏற்கனவே நடிகர் அஜித் அவர்களை ஒரு குழு அணுகி இருந்தனராம். ஆனால் அது சரி வராது என தெரிவித்து விட்டு, விஷ்ணு வர்தனின் இன்னொரு ஒன்லைனருக்கு ஒகே சொல்லி இருக்கிறாராம் நடிகர் அஜித். தற்போது கதையை டெவலப் செய்து கொண்டு இருக்கிறாராம் விஷ்ணு. விக்னேஷ் சிவனுடனான ப்ராஜக்ட் முடிவடைந்ததும் வெகு விரைவில் AK 63 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ பில்லா, ஆரம்பம் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் தற்போதே AK 63 திரைப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்க தொடங்கி இருக்கின்றனர் “