’ஆதிபுருஷ்’ பலரது உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது என்று அலகாபாத் நீதிமன்றம் கூறி இருப்பது பேசுபொருளாகி வருகிறது.
சமய கதாபாத்திரங்களை துளி கூட புரிந்து கொள்ளாமல், ஏதோ எடுத்தோம் கவுத்தோம் என்று எடுக்கப்பட்டு இருக்கும் இந்த ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்திற்கு எப்படி தணிக்கை குழு அனுமதி அளித்தது என்று தெரியவில்லை. இது பலரது சமய உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது என அலகாபாத் நீதிமன்றம் கூறி இருக்கிறது.
“ ஒரு பக்கம் ஆளும் மத்திய அரசு ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் நிலையில், நீதிமன்றம் இவ்வாரு கூறி இருப்பது தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது “