’என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை’, இயக்குநர் அல்போன்ஸ் புத்ரேன் காட்டம்!
Alphonse Puthren Angry With Fans Idamporul
’என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்ல’ என்று நெட்டிசன்களை கடுமையாக சாடி இருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரேன்.
நேரம், பிரேமம் என்று இரண்டு பெரிய ஹிட்களை கொடுத்த அல்போன்ஸ் புத்ரேன் நீண்ட நாட்களுக்கு பின்னர் கோல்டு என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு பெரிதளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரவே அதை தாங்கிக்கொள்ள முடியாத அல்போன்ஸ் ‘என்னை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என நெட்டிசன்களை கடுமையாக சாடி இருக்கிறார்.
“ விமர்சனங்கள் அடுத்தவர்களை காயப்படுத்தும் வகையில் இருக்க கூடாது என்பதை ரசிகர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது போக இயக்குநர்கள் தங்கள் படத்திற்கு தாங்களே பில்டப் கொடுப்பதையும் நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும் “