தன்னுடைய அடுத்த காதலை பற்றி தெரிவித்த நடிகை அமலாபால்!
Amala Paul HD
தனியார் நிறுவனத்திற்கு அமலா பால் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய அடுத்த படமான ‘கடாவர்’ திரைப்படத்தை பற்றியும் அவருடைய காதல் பற்றியும் ருசிகர தகவலை அளித்து இருக்கிறார்.
அமலாபால் தயாரித்து நடித்து இருக்கும் ‘கடாவர்’ திரைப்படம் வலை தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், படம் மற்றும் தன்னுடைய காதல் பற்றிய ருசிகர தகவல் ஒன்றை அமலாபால் கூறி இருக்கிறார். ‘என்னுடைய காதல் என்பது நான் மட்டுமே, இனி படத்தில் நடிப்பதிலேயே என் முழு கவனம் இருக்கும்’ என்றும் தெரிவித்து இருக்கிறார்.
“ ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு திரில்லர் படங்களே தன்னை தேடி வருவதாகவும், காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும் அமலாபால் தெரிவித்து இருக்கிறார் “