நடிகை அம்மு அபிராமி பிரபல இயக்குநருடன் காதலா?
Ammu Abhirami Love WIth Famous Director Facts Here Idamporul
நடிகை அம்மு அபிராமி அவர்கள் பிரபல இயக்குநர் ஒருவரை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சீசன் 1 முதல் சீசன் 4 வரை இயக்கி வந்தவர் இயக்குநர் பார்த்திவ் மணி. தற்போது சன் தொலைக்காட்சியில் டாப் குக்கு டூப் குக்கு என்றதொரு நிகழ்ச்சியின் இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அம்மு அபிராமி, தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் ஆனவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக பங்கேற்று இருந்திருந்தார்.
இந்த செட்டில் தான் இயக்குநர் பார்த்திவ் மணி அவர்களுக்கும், அம்மு அபிராமிக்கும் இடையில் ஒரு நட்பு உருவாகி இருக்கிறது. பின்னர் இருவரும் நட்பாக பல மாதங்கள் பழகி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த நட்பு காதலாக மாறி இருக்க கூடுமோ என்றதொரு சந்தேகம் ரசிகர்களுக்கு இடையில் எழுந்து இருப்பதாக தெரிகிறது. அதற்கு காரணம் பார்த்திவ் மணி அவருடைய இன்ஸ்டா வலைதளத்தில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று தான்.
அம்மு அபிராமி இந்த வருடம் தனது பிறந்தநாளை, இயக்குநர் பார்த்திவ் மணியுடன் கொண்டாடி இருப்பது, அதுபோக இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்திவ் பகிர்ந்து அதற்கு அவர் கொடுத்து இருக்கும் கேப்சன், பார்த்திவ் பதிவிட்ட அந்த பதிவிற்கு நன்றி தெரிவித்து இருக்கும் அம்மு அபிராமியின் கமெண்ட்ஸ், இவை எல்லாம் தான் ரசிகர்களுக்கு இருவரும் காதலில் இருக்க கூடுமோ என ஒரு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.
“ இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், நட்பாகவும் இருக்கலாம், ஏன் காதலாகவும் இருக்கலாம், எதுவாக இருந்தாலும் இருவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்ற பட்சத்தில் அதுவரை எதையும் உறுதியாக சொல்ல முடியாமல் ஊர்ஜிதமாகவே சொல்ல முடியும் “