’அன்பு மகளே’, மகள் பாவதாரிணியின் பிரிவை அடுத்து இளையராஜாவின் உருக்கமான பதிவு!
Anbu Magale Ilaiyaraaja Emotional Message To Bhavatharini Idamporul
இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் மறைந்ததை அடுத்து இளையராஜா அவர்கள் சமூக வலைதளங்களில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
இளையராஜாவின் மகளான பாவதாரிணி (47) புற்று நோயின் தீவிரத்தால் இலங்கையில் நேற்றைய தினம் மறைந்து இருக்கிறார். இதனையடுத்து இளையராஜா அவர்கள் பாவதாரிணியின் குழந்தை பருவத்தில், அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை ‘அன்பு மகளே’ என்ற கேப்சனுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பது நெஞ்சை உருக்கும்படியாக இருக்கிறது.
“ 47 வயதே ஆகும் பின்னனி பாடகி பாவதாரிணியின் பிரிவு, இளையராஜா அவர்களுக்கு மட்டும் அல்ல ஒட்டு இசை பிரியர்களுக்கும் ஒரு பெரும் இழப்பு தான் “