அங்காடித்தெரு பிரபலம், நடிகை சிந்து உடல்நலக்குறைவால் மறைவு!
Angadi Theru Actress SIndhu Passed Away Idamporul
அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகை சிந்து உடல் நலக்குறைவால் மரணம் அடைந்து இருக்கிறார்.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்தவர் நடிகை சிந்து. நீண்ட நாட்களாகவே மார்பக புற்று நோய்க்கு எதிராக தைரியமாக போராடி வந்தார். இந்த நிலையில் நோயின் தன்மை மிகவும் முற்றி தற்போது மரணம் அடைந்து இருக்கிறார். அவருக்கு வயது 42 என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கு அடுத்தகட்டமாக நண்பர்கள் பலர் உதவியுடன் தொடர்ந்து புற்று நோய்க்கு எதிராக போராடி வந்தார். தொடர்ந்து வீடியோ பதிவின் மூலம் பலரிடமும் உதவியும் கோரி வந்தார். மூன்று வருட போராட்டத்திற்கு பிறகு கடைசியாக வரை மரணம் ஜெயித்து இருக்கிறது.
“ சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர் “