அதிரடியான சரவெடியான ’அண்ணாத்த’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Annaatthe Trailer Releasing Date Announced
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சன்பிக்சர் கலாநிதிமாறன் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில் ரஜினி காந்த், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப் என்று பல்வேறு நடிகர்கள் களம் இறங்கும் அண்ணாத்த படத்தின் ட்ரெயிலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ அதிரடியான சரவெடியான தலைவரின் அனல் பறக்கும் ’அண்ணாத்த’ படத்தின் ட்ரெயிலருக்கு ரசிகர்கள் இன்றிலிருந்தே ட்ரென்டிங்கை துவங்கி விட்டனர். “