100 மில்லியன் பார்வையாளர்களை எட்டியது ’அரபிக் குத்து’ பாடல்!
Arabic Kuthu Hits 100 Million Views
’பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ‘அரபிக் குத்தி’ பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை எட்டி இருக்கிறது. அனிருத் மேஜிக்கால் இன்ஸ்டா ரீல்ஸ்சில் இன்னமும் பிரபல அந்தஸ்தில் தான் இருக்கிறது ‘அரபிக் குத்து’.
“ அனிருத் செயல் எல்லாம் வர வர மெருகேறிக் கொண்டே போகிறது. தொட்டதெல்லாம் ஹிட் என்றதொரு நிலைக்கே வந்துவிட்டார் அனிருத் “